Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தூய்மையானவர்கள் மட்டுமே இலங்கை தமிழரசுக்கட்சி சின்னத்தில்  போட்டியிடுகின்றனர்; சாணக்கியன் தெரிவிப்பு!

தூய்மையானவர்கள் மட்டுமே இலங்கை தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்; சாணக்கியன் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் தேசிய பரப்பில் கொலைசெய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இம்முறை பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி வேட்பாளர்கள் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

நீண்டகாலத்திற்கு பின்னர் தூய்மையான தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களைக்கொண்ட வேட்பாளர்களைக் கொண்டு இலங்கை தமிழரசுக்கட்சி களமிறங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது எமது வேட்பாளர்கள் சிறந்த வேட்பாளர்கள் என்ற கருத்து நிலவுகின்றது. எமது கட்சியில் ஊழல் அற்ற, கடந்த காலத்தில் மோசடிகளில் ஈடுபடாதவர்கள் எமது வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கியுள்ளோம்.

ஏனைய கட்சிகள் இது தொடர்பில் பேசமுடியாது. கடந்த காலத்தில் ஊழல்மோசடிகளில் அதிகளவில் ஈடுபட்டவர்கள் ஏனைய கட்சிகளில் போட்டியிடுகின்றார்கள்.

தமிழ் தேசிய பரப்பில் கொலைசெய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக்கொடுக்காதவர்கள் இலங்கை தமிழரசுக்கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர். ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஏனைய பிரதான கட்சிகளை பார்த்தால் தமிழ் பேசும் மக்களாகவே களமிறக்கப்பட்டுள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி இரண்டிலும் இரு இனங்களையும் சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றார்கள். அதேசமயம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.


கடந்த காலத்தில் எமது கட்சியின் வேட்பாளர் தெரிவின்போது சில சில விமர்சனங்கள் இருந்தது. ஆனாலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு தமிழரசுக்கட்சியை ஆதரிக்ககூடிய வகையில் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். கடந்த காலத்தில் போட்டியிட்ட இருவர் மட்டுமே இம்முறை போட்டியிடுகின்றோம். ஏனைய ஆறு வேட்பாளர்களும் புதிய முகங்களாக களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த நான்கு வருட காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தாலும் கூட இலஞ்சம், ஊழல்மோசடி, காணி அபகரிப்பிலேயே அவர்களின் காலங்களை கடத்தியிருந்தார்கள்.

இன்னுமொருவர் இதுதான் நான் இறுதிமுறை என்று தேர்தலில் போட்டியிட்டு அவரது கூடுதலான காலத்தினை லண்டனில் கழித்துவிட்டு தேர்தலில் குதித்திருகின்றார்.


அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியும் தமிழரசுக்கட்சிசார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்ற ஒரேயொருவர் நான். மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை பெறவேண்டும் என்பதற்காகவே உழைத்துக்கொண்டிருக்கின்றோம் என கருத்து தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
மட்டு கரடியனாறு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடியில் இரு தினங்களில் 18 மாடுகள் திருட்டு!

மட்டு கரடியனாறு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடியில் இரு தினங்களில் 18 மாடுகள் திருட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.