அரசாங்கத்தால் நீண்ட காலத்திற்கு செயற்கையான வகையில் நாணய மாற்றத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில்,”இலங்கையின் வரலாற்றில் பொருளாதார பெறுமதி 11 வீதம் மறை பெறுமதியை அடைந்ததில்லை.
மேலும் எமக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் உள்ளன.இதனால் பல துறைகள் பாதிப்படைந்துள்ளன.
இதேவேளை கடன்களை மீள செலுத்த ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு ஆண்டுகளிலும் 4 தொடக்கம் 5 பில்லியன் டொலர் தேவைப்படும். அது சாதாரண தொகை அல்ல.
எனவே கடன்பட்டு கடன் செலுத்த வேண்டிய கட்டத்தில் தான் நாங்கள் உள்ளோம்.
இவை அனைத்தும் நிச்சயமாக ரூபாவின் மீது கடும் அழுத்தத்தை கொடுத்து ரூபாவின் பெறுமதியை குறைவடைய செய்வதுடன் டொலரின் பெறுமதியை அதிகரிக்க செய்யும்.
இதற்கு எந்த வகையான செயன்முறைகளை அரசாங்கம் செய்யும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.” என கூறியுள்ளார்.