Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசு நெல்லின் விலையை அதிகரிக்க வேண்டும்; முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோரிக்கை!

அரசு நெல்லின் விலையை அதிகரிக்க வேண்டும்; முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோரிக்கை!

3 years ago
in மட்டு செய்திகள்

விவசாயிகளின் விவசாயத்திற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் நெல்லிற்கான விலையினை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று (06.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அரசியல் நாடகத்தினை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

தற்போது அறுவடைகாலம் தொடங்கியுள்ளதன் காரணமாக உடனடியாக நெல் கொள்வனவை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் நெல்லின் விலையானது அதிகரிக்கப்பட வேண்டும். இதே போன்று கிரிமிநாசினிகளுக்கான விலைகள் குறைக்கப்பட வேண்டும்.

இன்றுள்ள சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோகத்தில் ஒரு ஏக்கர் விவசாயம் செய்வதற்கு ஒன்றரை இலட்சம் ரூபா செலவு ஏற்படுகின்றது.

விவசாயிகளின் செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக அரசாங்கம் இதனை கவனத்தில்கொண்டு நெல்லிற்கான விலை அதிகரிப்பு தொடர்பில் விவசாயிகள் விடுத்துவரும் கோரிக்கையினை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும்.

அதேசமயம் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர் இலங்கை அரசாங்கம் உள்ளுராட்சி மன்றங்கள் குறித்து மேற்கொள்ளும் அரசியல் நாடகத்தினை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மக்கள் நான்கு வருடம் ஆணை வழங்கியுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

அந்த நான்கு வருடத்திற்குரிய ஆணையை வாக்களிப்பின் ஊடாக தமதுக்கு விரும்பிய பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் ஆணையை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது. இதுவொரு அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

மக்கள் வழங்கிய ஆணை வழங்கிய காலத்தினை நீடிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் என்பது இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான ஒரு அரசியல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ளும் சதியாகும். மக்கள் இதற்காக ஆணை வழங்கவில்லை.இறைமையுள்ள அரசாங்மானது மக்கள் ஆணையை மதிக்கவேண்டும்.நான்கு வருடம் உள்ளுராட்சிமன்றங்களுக்கு வழங்கிய மக்கள் ஆணையை இலங்கை அரசாங்கம் மீறல் முற்படும் நிலையென்பது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

மக்கள் ஆணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடாத்துவதே அந்தஆணைக்கு கொடுக்கும் மதிப்பாகும். இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள சதிவலையில் சிக்கிவிடாமல் தேர்தல்களை நடாத்துவதற்கான அழுத்தங்களை மக்கள் விடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
Next Post
யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.