Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!

இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.

இளம் தலைமுறையினர் இயற்கை உணவுகளை விட செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வதே இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம் மற்றும் பதற்றம் உள்ளிட்ட உளவியல் காரணிகளுக்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார். மூளைக்கும் குடலுக்கும் இடையிலான இந்த தொடர்பு ‘குடல்–மூளை அச்சு’ (Gut-Brain Axis) என அழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கும் போது அதன் தாக்கம் குடலிலும் வெளிப்படக்கூடும் என அவர் கூறியுள்ளார். இதனுடன் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் இணையும் போது, எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம் என அவர் விளக்கியுள்ளார்.

காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் தானியங்கள் போன்ற இயற்கை உணவுகளைத் தவிர்த்து, எளிதில் கிடைக்கக்கூடிய செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை இளைஞர்கள் அதிகம் நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக இளம் தலைமுறையினரிடையே IBS உள்ளிட்ட குடல் சார்ந்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை – கொழும்பு அதிசொகுசு பேருந்து மீது கல்வீச்சு; சாரதி காயம் – வியாபாரப் போட்டி காரணமா?
செய்திகள்

கல்முனை – கொழும்பு அதிசொகுசு பேருந்து மீது கல்வீச்சு; சாரதி காயம் – வியாபாரப் போட்டி காரணமா?

November 12, 2026
இரண்டு வாரங்களுக்குள் அனோஜன் சிவராசா நாடு திரும்புவார்
செய்திகள்

இரண்டு வாரங்களுக்குள் அனோஜன் சிவராசா நாடு திரும்புவார்

November 12, 2026
வெளிநாட்டு ஆசை காட்டி பலரிடம் பணம் சுருட்டிய யாழ் நபரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது
செய்திகள்

வெளிநாட்டு ஆசை காட்டி பலரிடம் பணம் சுருட்டிய யாழ் நபரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது

November 11, 2026
கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!

November 11, 2026
வணிகப் பெயர் பதிவை எளிமைப்படுத்தும் புதிய திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்!
செய்திகள்

வணிகப் பெயர் பதிவை எளிமைப்படுத்தும் புதிய திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்!

November 11, 2026
பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

November 11, 2026
Next Post
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு