Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுமந்திரனுக்கு வந்துள்ள காலம் கடந்த ஞானம்; சின்னத்தைத் திருடியோருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என சுமந்திரன் வலியுறுத்து!

சுமந்திரனுக்கு வந்துள்ள காலம் கடந்த ஞானம்; சின்னத்தைத் திருடியோருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என சுமந்திரன் வலியுறுத்து!

2 years ago
in செய்திகள்

“ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரைத் திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்றுமுன்தினம்(13) யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்தியிலே ஆட்சி அமைத்திருக்கக்கூடிய கட்சிக்கு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலே ஓர் ஆசனம் கிடைக்குமாக இருந்தால் அவர்கள் இங்கிருக்கும் மக்கள் எங்களையும் பிரதிநிதியாக ஏற்றிருக்கின்றார்கள் என்பதனைச் சொல்லுவார்கள். அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. ஜனாதிபதித் தேர்தலோடு ஓர் ஆபத்து வந்திருக்கின்றது. பல தடவைகள் நாங்கள் அபாயச் சங்கை ஊதினோம். அது கைமீறிவிட்டது. பொதுவான சின்னத்தையும் திருடி விட்டார்கள். சின்னத்தைத் திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைத் திருடினார்கள். திருடுவது என்பது அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையாகவே இருந்திருக்கின்றது.

ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால், அவர்கள் திருந்தவில்லை. கட்சிப் பெயரைத் திருடினார்கள். மக்களுக்குப் பொய்யான நம்பிக்கையை ஊட்டி அந்தச் சின்னத்தையும் திருடி விட்டார்கள். கடந்த மாதம் 23ஆம் திகதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சங்கு சின்னத்தைத் தாம் பயன்படுத்த மாட்டோம் என்று. அவர்களுக்கு தங்களின் கையெழுத்தின் பெறுமதி தெரியவில்லை.

சின்னத்தைத் திருட மாட்டோம் என்று கையெழுத்திட்டவர்கள் ஒரு சில மணித்தியாலங்களுக்கு உள்ளேயே குத்துவிளக்கைக் கைவிட்டு சங்கைத் தருமாறு தேர்தல் திணைக்களத்துக்குக் கடிதம் கொடுத்தார்கள்.

இவ்வாறான கள்ளருக்கு இம்முறை மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். மாம்பழத் திருடர்களுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு

September 28, 2026
அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
செய்திகள்

அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

September 28, 2026
மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
செய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

September 28, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
Next Post
ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.