Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் இடைக்கால கொடுப்பனவு!

ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் இடைக்கால கொடுப்பனவு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று (16) மூவாயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வைப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் நிலையங்கள் மற்றும் உப அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் 18 ஆம் திகதி முதல் பணத்தைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று (16) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபா வழங்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்கான பணத்தை திறைசேரியிலிருந்து வழங்குமாறு அண்மையில் பணிப்புரை விடுத்தார்.

அந்த அறிவுறுத்தலின்படி, திறைசேரியிலிருந்து தேவையான பணம் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதோடு, அதனை இன்று முதல் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் வைப்பிலிட ஓய்வூதிய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக ரூ.3000 வழங்க 24/08/2024 திகதியிட்ட 02/2024 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை.

கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, 679,960 ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான 2,021 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தக் கொடுப்பனவை இன்று (16) முதல் வழங்க ஓய்வூதியத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் இன்று பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், தபால் நிலையங்கள் மற்றும் உப அலுவலகங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இந்தக் கொடுப்பனவை (18) முதல் பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
ஹரீஸை கேவலப்படுத்தியுள்ள ர‌வூப் ஹ‌க்கீம்

ஹரீஸை கேவலப்படுத்தியுள்ள ர‌வூப் ஹ‌க்கீம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.