Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வழங்குபவர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வழங்குபவர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள்

அண்மைக் காலமாக வெளிநாட்டவர்கள் சிலர் இலங்கையில் தங்கியிருந்து இணைய மோசடிகளில் ஈடுபட்டு வருவதால் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் போதும், ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு வழங்கும் போதும் உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ சுட்டிக்காட்டினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

கண்டியில் 156க்கும் அதிகமானோரும், பாணந்துறையில் 22க்கும் அதிகமானோரும், இராஜகிரியவில் 15 பேரும், என கடந்த சில தினங்களுக்குள் மாத்திரம் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அது மாத்திரமின்றி 500க்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள், 200க்கும் மேற்பட்ட கனணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணகளில் இவ்வாறானவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் வீட்டு உரிமையாளர்களும் இவர்களுக்கு உடந்தையாகவுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.அதாவது இவர்கள் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அறிந்தே தமது வீடுகளை வாடகைக்கு வழங்குகின்றனர்.

மிகவும் சூட்சுமமான முறையில் அவர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுகின்றனர். கண்டியில் 77 அறைகள் உள்ள ஒரு ஹோட்டலில் 47 அறைகளை வாடகைக்கு பெற்று அங்கு சகல வசதிகளுடனும் மோசடிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

எனவே ஹோட்டல் உரிமையாளர்களும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை எனில் யாரும் அறியாமல் கோடிக்கணக்கான பணத்தை இழக்க நேரிடும். இவர்கள் அனைவரும் சுற்றுலா வீசாவிலேயே வருகை தந்துள்ளனர்.

அவர்கள் இலங்கையை தெரிவு செய்வதற்காக சரியான காரணத்தை எம்மால் கூற முடியாது. ஆனால் இந்த மோசடிக்காரர்களால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு இலங்கையிலுள்ளவர்கள் விரைவாக பதிலளிக்கின்றனர்.தென்னாசியாவில் இவ்வாறான பிரஜைகள் கொண்ட நாடுகளை அவர்கள் தெரிவு செய்கின்றனர் என்றார்.

அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பில் குறிப்பிடுகையில், கண்டி மற்றும் அத்துருகிரிய பிரதேசங்களில் இணையதள மோசடியில் ஈடுபட்ட சீனப்பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேறு நாடுகளில் வங்கி கணக்குகளை ஊடுருவி இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே வீடுகளை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு வழங்கும் போது மிக அவதானத்துடன் செயற்படுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கையின் வங்கி மற்றும் நிதி கட்டமைப்புக்கள் இதுவரை இவர்களால் ஊடுருவப்படவில்லை. விசாரணைகள் மூலமாகவே அதனை கண்டறிய முடியும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
சீஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக வின்சென்ட் பெரேரா பதவிப் பிரமாணம்

சீஷெல்ஸின் புதிய சட்டமா அதிபராக வின்சென்ட் பெரேரா பதவிப் பிரமாணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.