தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா – கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து ஏ-9 பிரதான வீதியின் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு அவசரமாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.








