Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!

13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புத்தளம் – மாரவில பகுதியில் 13 வயது சிறுமியை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் குறித்த சிறுமி தொடர்பான இந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 அவசர இலக்கத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மஹாவெவ – குடாவெவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், சிறுமியின் தந்தையுடன் நெருங்கிய நட்பை பேணி வந்ததுடன், அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சிறுமியுடன் பழகிய சந்தேகநபர், அவரை காதல் உறவில் ஈடுபடுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை 5ஆம் திகதி “கடற்கரைக்கு செல்வோம்” எனக் கூறி சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேகநபர், மஹாவெவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் மேலும் இரு சந்தர்ப்பங்களில் அதே விடுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸ் பரிசோதகர் ரணவீர தலைமையிலான குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
Next Post
வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!

வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு