Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்லடியில் திருட்டுச் சம்பவம்; கணவன் மனைவி கைது!

கல்லடியில் திருட்டுச் சம்பவம்; கணவன் மனைவி கைது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் குற்ற தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ ரஹீம் தெரிவித்தார்.

கல்லடி திருச்செந்தூரில் அமைந்துள்ள தனது வீட்டைப் பூட்டிவிட்டு பிறந்தநாள் விழா ஒன்றிற்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டை திறந்து பார்த்தபோது குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

வீட்டிலிருந்த அலுமாரியை உடைத்து அலுமாரிலிருந்த தங்க பையைத் திருடி மட்டக்களப்பு நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த குறித்த சம்பவத்தில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்த எ.டி.எம் அட்டையை மேற்படி சம்பவத்தில் ஈடுபடுத்திய கொள்ளையர்கள் திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற சம்பவத்திற்கு இடத்துக்கு சற்று அருகிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் 13 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு வந்த குறுஞ்செய்தி ஊடாகவே குறித்த சம்பவத்தை அறிய முடிந்துள்ளது.

மேற்படி பல்பொருள் விற்பனை நிலைய சிசிடிவி கமராவை பரிசோதித்த போது சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி வீட்டின் மேல் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த நபரே மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்றை சேர்ந்த 21 வயதுடைய குறித்த நபர் அவரது மனைவியுடன் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார் .

குறித்த நபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள அதே நேரம் திருடப்பட்ட நகையை நகைக்கடையில் விற்பனை செய்த மனைவியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களிடமிருந்து ஒரு தங்க மாலை மற்றும் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாய் பணம் எ.டி.எம் அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளன .இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதமான நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
அரசாங்கத்திடம் மூன்று அரச வாகனங்களை மீள ஒப்படைத்தார் மஹிந்த ராஜபக்ச

அரசாங்கத்திடம் மூன்று அரச வாகனங்களை மீள ஒப்படைத்தார் மஹிந்த ராஜபக்ச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.