தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினால் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தேர்தல் காரியாலயங்கலானது திறந்து வைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக கட்சியின் மற்றொரு தேர்தல் பரப்புரை காரியாலயம் ஒன்றை கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் கட்சியின் அப்பிரதேச குழு தலைவர் குகநாதன் தலைமையில் நேற்றைய தினம் (21) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி தேர்தல் பரப்புரை காரியாலயத்தினை திறந்து வைத்திருந்தார்.