Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்றத்தில் பேரம் பேச மக்கள் ஆணை வழங்க வேண்டும்; சரவணபவன் கோரிக்கை

பாராளுமன்றத்தில் பேரம் பேச மக்கள் ஆணை வழங்க வேண்டும்; சரவணபவன் கோரிக்கை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தமிழரசுக்கட்சி இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில் திகழும். அந்த பேரம் பேசும் சக்தியைக் கொடுப்பதற்கு மக்கள் அனைவரும் எமது சின்னமான வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும். என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியி சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும், மாவட்ட வேட்பாளருமான தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகரின் முதல்வராக 5 வருடங்கள் சிறப்பான பணியினை வழங்கியிருந்தேன். மட்டக்களப்பு நகரத்துக்குள் எனக்கு கிடைத்த அதிகாரம் மாவட்டத்துக்கு விரிவுபடுத்தப்படவேண்டும் என்பதற்காகவே இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். இத் தேர்தலில் வெற்றிபெறும் போது எமது வளங்களான விவசாயம், மீன்பிடி, கால்நடை என ஏனைய பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு எமது ஒத்துழைப்புடன் முன்னேற்றக்கூடிய வகையில் எமது திட்டங்கள் வகைப்படுத்தப்படும்.

அதே போன்று யுத்தத்தினால் கணவனை இழந்தவர்களுக்கான வழிகாட்டிச் செயற்பாடும், பெருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் வழிவகைகள் செய்து கொடுக்கப்படும். தற்சார் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வழிமொழிந்து அதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். வெள்ளக் காலங்களில் வெள்ளம் ஏற்படாத வகையிலும், வரட்சி காலத்தில் வரட்சி ஏற்படாத வகையிலும் சரியான நீர்முகாமைத்துவத்தினை செய்யவேண்டும்.

தமிழரசுக்கட்சி இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில் திகழும், அந்த பேரம் பேசும் சக்தியைக் கொடுப்பதற்கு மக்கள் அனைவரும் எமது சின்னமான வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும்.

இலஞ்சம் ஊழல்களில் ஈடுபடாதவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறானவர்களைத் தெரிவு செய்யும் போது மிக வினைத்திறனான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யலாம். அப்போது பாராளுமன்றத்தில் வினைத்திறனான செயற்பாடுகள் நாம் மேற்கொள்ளலாம் அதன் மூலம் எமது பிரதேசம் வளர்ச்சியடையும். அந்த வளர்ச்சி மூலமாக பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடையும்.

தமிழ்த் தேசியச் சிந்தனையுடன் நாம் அனைவரும் தொடர்ச்சியாகப் பயணிக்க வேண்டும். அச் சிந்தனையில் இருக்கின்ற நாம் அனைவரும் மண்ணையும், மக்களையும் பாதுகாப்பதற்கு நாங்கள் ஒன்றிணைந்து வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும். அத்துடன் எனது 7ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்க வேண்டும்.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற தமிழ்த் தேசியத்திற்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டுக்கும் ஆதரவு வழங்கமாட்டோம். ஆனால் நாட்டின் நன்மைக்காக செய்யப்படும் திட்டங்களுக்கு எமது கட்சி ஆதரவு வழங்கும் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை ; அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை ; அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.