Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊடகங்களில் பொய் செய்தி பரவுவதாக அரியநேந்திரன் குற்றச்சாட்டு!

ஊடகங்களில் பொய் செய்தி பரவுவதாக அரியநேந்திரன் குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரூடாக எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14 ஆம் திகதியே கையளித்து விட்டேன் என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று முன்தினம் (20) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதி தேர்தலிலே சுயேட்சை வேட்பாளராக சங்கு சின்னத்தில் நான் போட்டியிட்டு ஏறக்குறைய 2 இலட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தேன்.

அதன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் சட்டத்தின்படி ஒரு வேட்பாளர் செலவு செய்கின்ற செலவு அறிக்கைகளை குறிப்பிட்ட நேரத்தில் அறிக்கை செய்யப்பட வேண்டும் என இருந்தது.

அதன் அடிப்படையிலேயே கடந்த 13 ஆம் திகதிக்கிடையில் அந்த அறிக்கைகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது.

மூன்று பேர் அந்த செலவறிக்கையை வழங்கவில்லை எனவும், அதில் எனது பெயரும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உண்மை என்னவெனில் எனது கணக்கறிக்கை சரியான முறையில் தயாரிக்கப்பட்டு நான் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சைக்கு குழுவில் போட்டியிடுவதற்கான முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரின் மூலம் எனது கையொப்பத்துடன் குறிப்பிட்ட செலவறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் கடந்த 14 ஆம் திகதி நேரடியாகவே கையளித்திருந்தார்.

கடந்த 13 ஆம் திகதி என்பது விடுமுறை தினமாகையால் எனது செலவறிக்கையை ஈமெயில் மூலமாகவும் பக்ஸ் மூலமாகவும் அனுப்பியிருந்தோம்.

ஆனால் தற்போது பல ஊடகங்களில், சமூக வலைத்தளங்களிலும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நான் அந்த கணக்கறிக்கையை அனுப்பவில்லை என்ற செய்தி தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன அந்த செய்திகளுக்கு நான் முற்றாக மறுப்பைத் தெரிவிக்கின்றேன்.

உண்மையிலேயே அந்த கணக்கறிக்கையை எனக்குரிய முகவராக நியமிக்கப்பட்ட சிற்பரன் என்பவரூடாக எனது கையொப்பத்துடன் தேர்தல் ஆணையத்தில் கடந்த 14ஆம் தேதி கையளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை நான் தெரிவித்துக் கொள்வதோடு, இதன் மூலம் யாரும் எதுவித சந்தேகத்தையும் கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
Next Post
முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.