Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்களை மீட்பதில் சிக்கல் ; அரசாங்கம் தெரிவிப்பு

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்களை மீட்பதில் சிக்கல் ; அரசாங்கம் தெரிவிப்பு

2 years ago
in செய்திகள்

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு என்ற ரீதியில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றோம். அவர்கள் உத்தியோகபூர்வமற்ற இராணுவத்தில் சட்ட ரீதியற்ற முறையில் இணைந்துள்ளதால் இராஜதந்திர ரீதியில் இவ்விடயத்தை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் முப்படை வீரர்கள் தொழில் வாய்ப்புக்காக ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளனர். இவ்வாறு இணைந்தவர்களின் பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பில் இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவரிடம் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய இவ்வாறானவர்களை மீண்டும் ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கும், தற்போது காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் தகவல்களை ஆராய்ந்து வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது இலகுவான விடயமல்ல. இன்று அந்த தீவிர யுத்தம் இடம்பெற்று வருகிறது.

எவ்வாறிருப்பினும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு என்ற ரீதியில் நாம் இந்த விவகாரத்தில் அவதானம் செலுத்தி வருகின்றோம். ஆனால் முழுமையான தகவல்களை குறுகிய காலத்துக்குள் வழங்க முடியும் என்று எம்மால் கூற முடியாது. எனவே முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளை அவ்வாறே முன்னெடுத்துச் செல்கின்றோம். அதற்கமைய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்ட ரீதியாக ரஷ்ய இராணுவத்தில் இணைந்திருந்தால் அவர்களை இலகுவாக நாட்டுக்கு அழைத்து வர முடியும். ஆனால் இவர்கள் சட்டத்துக்கு முரணாக உத்தியோகபூர்வமற்ற இராணுவத்தில் இணைந்திருப்பதால் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது இலகுவானதல்ல என்றார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
மகனின் உயிரை காப்பாற்ற ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த தந்தை; இறுதி மரியாதை செலுத்த வந்த மகன்!

மகனின் உயிரை காப்பாற்ற ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த தந்தை; இறுதி மரியாதை செலுத்த வந்த மகன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு