Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு; கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம்

தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு; கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கில் தமிழர்கள் தேசிய இனப்பிரச்சினையையும், தமிழ் தேசியத்தினையும் கருத்தில் கொண்டும் செயற்படும் கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கு பலர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் சிந்தித்து தமது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோன்று தமிழ் தேசியத்தின் அடிப்படையில் செயற்படும் கட்சிகள் தங்களுக்குள் வேறுபாடுகளை மறந்து தமிழ் தேசியத்திற்கான வாக்குகளைப்பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் விக்னேஸ்வரன் கஜரூபன்,

எதிர்வரும் பொதுத்தேர்தலானது வடகிழக்கு தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரு சவால்மிக்க தேர்தலாக காணப்படுகின்றது. இன்று வடகிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் பலவாக பிளவுபட்டு நிற்கின்றது.

அதேபோன்று பல சுயேட்சைக்குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் குழப்ப நிலையிலிருக்கும் இந்த சூழலில் தமிழ் மக்கள் அணியாக திரண்டு தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளை ஆதரிக்கவேண்டும்.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய அரசியல் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.இன்று அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் சூழ்நிலையேற்பட்டுள்ளது.இதனை உணர்ந்து இப்பகுதியிலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுடன் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆதரவு என்றும் இருக்கும்.

பாராளுமன்ற தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் இளைஞர்கள் வேறுபடுத்திபார்க்கவேண்டும். ஜனாதிபதியாக பெரும்பான்மை இனத்தவர் ஒருவரே வரும் சூழ்நிலை இந்த நாட்டில் உள்ளது.

தமிழர்கள் இந்த நாட்டில் ஜனாதிபதியாக வரக்கூடிய சூழல் இருக்காது. இன்று வடகிழக்கில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி என்ற கோசம் எழுந்துள்ளதை காணமுடிகின்றது. தேசிய மக்கள் சக்தியின் வரலாற்றை கற்கவேண்டிய சூழ்நிலையில் நாங்கள் அனைவரும் இருக்கின்றோம்.

பாராளுமன்ற தேர்தலானது எமது இனத்தின் அடையாளத்தினையும் இனத்தின் சுயநிர்ணய உரிமையினையும் பாராளுமன்றத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும். வடகிழக்கில் உள்ள இளைஞர்கள் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் செல்வதை விடுத்து தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளில் உள்ள ஆளுமையானவர்களை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவதற்கானசெயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளும் நிலைமைகள் வடகிழக்கு இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமையானது தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்திற்கு ஆபத்தானது.

பாராளுமன்ற தேர்தல் சிறுபான்மை மக்களின் அரசியல் இருப்பினையும் அவர்களின் அபிலாசைகளை தக்கவைக்கும் ஒரு களமாகவே நோக்கவேண்டியுள்ளது- என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
பெங்களூருவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

பெங்களூருவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.