Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டாபயவை பின்தொடரும் அநுர; கடுமையாக சாடும் இராதாகிருஷ்ணன்

கோட்டாபயவை பின்தொடரும் அநுர; கடுமையாக சாடும் இராதாகிருஷ்ணன்

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச, இனவாதத்தைப்பற்றி பேசி மக்கள் மத்தியில் எவ்வாறு வாக்கு சேகரித்தாரோ அதுபோல தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் மக்கள் மத்தியில் இனவாதத்தை பற்றி பேசியே வாக்கு சேகரிக்கின்றார். என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நானு ஒயா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு தேர்தலிலும் முக்கிய பங்கை வகித்தது இந்த ஈஸ்டர் தாக்குதல் அந்த ஈஸ்டர் தாக்குதல் பிரச்சினையை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் அனைவரும் ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என கம்பன்பில அறிவித்திருந்தார். தற்போது இது ஒரு புது கதையாக இருக்கிறது. இரண்டு தேர்தலிலும் இந்த இரண்டு ஜனாதிபதிகளும் இதனை பயன்படுத்தியே வந்துள்ளனர்.

நாம் தற்போதய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முழுபலத்தையும் வழங்கினால் அவர் நினைத்ததை வைத்து செயல்படுவார் ஆகவே ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச இந்த நாட்டின் பிரதமராக வருவதற்கு செயற்பட வேண்டும்.

தற்போதய அரசாங்கம் மக்கள் மத்தியில் சொன்னவற்றை எதையும் செய்ததில்லை 48 மணித்தியாலங்களில் திருடர்களை கைது செய்வதாக கூறினார்கள், தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாக கூறினார்கள், இதுவரை எவரையும் கைது செய்யவில்லை அநுரவிற்கே தெரியாது அவர் ஜனாதிபதியாக வருவார் என்று.

இன்று அரிசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாய் என கூறியவர்கள் இன்று 1350 ரூபாயில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

பொருட்களின் விலை அதிகரித்துள்ளது தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் தீபாவளி முற்பணம் எவ்வளவு என்பதனை பெருந்தோட்ட நிறுவனங்கள் இதுவரை அறிவிக்கவில்லை.

ஒருகாலத்தில் EPF பணத்தை யானை விழுங்கிவிட்டதாக கடந்த அரசாங்கத்தில் ரணிலுக்கு ஆதரவு வங்கியபோது கூறியவர்கள் மீண்டும் அந்த யானையை கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே தாம் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
வடக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு இடையில் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் - இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு இடையில் சந்திப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.