முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஏன் திடீரென்று அடைக்கப்பட்டுள்ளார்கள் என ஊடவியலாளர் எழுப்பிய கேள்விக்கு எனக்குத் தெரியாது. நானே போய்ப் பார்க்க வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கக்கூடிய ஒரே வழி முறை இவ்வாறு விசாரணைகளில் பங்கேற்பதாக நாமல் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கூப்பிடுவது நல்லது. நம்மிடம் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட ஒரே வழி இதுக்கு வர வேண்டும். ஏனென்றால் தெரிந்தே பொய் சொல்பவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் தெரிந்து பொய் சொல்பவர்கள் அல்ல. நாங்கள் பதில் சொல்லவும் தயார் என்று மேலும் தெரிவித்துள்ளார்.