Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொது தேர்தலிலிருந்து சிறிதரனை விலகுமாறு கோரிக்கை

பொது தேர்தலிலிருந்து சிறிதரனை விலகுமாறு கோரிக்கை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்காது உடனடியாக தமிழ்த் தேசிய விரோத கும்பல் ஆக்கிரமித்து வைத்துள்ள சர்வாதிகார தமிழ் அரசுக் கட்சியிலிருந்தும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிருந்தும் சிவஞானம் சிறிதரன் விலகவேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளரும் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளருமான கருணாகரன் குணாளன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் தமிழரசு கட்சியினரால் விளக்கம் கோரி கடிதமான்று சிறிதரனுக்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் கருணாகரன் குணாளன் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.சிறிதரன் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றாலும் அவரால் பாராளுமன்றம் செல்லமுடியாது.

சர்வாதிகார தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் மேற்கொண்டுள்ள ஒழுக்காற்று விசாரணைக்கு அமைய சிறிதரன் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படுவதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்படுவார்.

தேர்தலில் அவரின் இடத்திற்கு அடுத்த நிலையில் வரக்கூடிய தமிழ்த்தேசிய விரோதியான சுமந்திரன் அணியில் ஒருவர் பாராளுமன்றம் செல்வார்.

இது வாக்காளர்களுக்கு சிறிதரன் தெரிந்து கொண்டும் இழைக்கின்ற பச்சைத் துரோகம் ஆகும்.

மேலும், சிறிதரன் பெற்றுக்கொடுக்கும் வாக்குகளினாலேயே ஆப்ரஹாம் சுமந்திரன் அணி ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தையும் கைப்பற்றப்போகின்றது என்பதனையும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் உணர்ந்து செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு
காணொளிகள்

மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு

October 2, 2026
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

October 2, 2026
ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!
செய்திகள்

ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

October 2, 2026
எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!

October 2, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு;  நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு; நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!

October 2, 2026
நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!
செய்திகள்

நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!

October 2, 2026
Next Post
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு