Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு நீதிமன்றில் வெடி குண்டை கண்டுபிடிக்கும் முயற்சியில் விசேட அதிரடிப்படையினர் மோப்பநாய் சகிதம் தேடுதல் வேட்டை

மட்டக்களப்பு நீதிமன்றில் வெடி குண்டை கண்டுபிடிக்கும் முயற்சியில் விசேட அதிரடிப்படையினர் மோப்பநாய் சகிதம் தேடுதல் வேட்டை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய செய்தி👇👇👇

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிசாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மோப்பநாய் சகிதம் பலத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்க்கப் போவதாக பொலிசாருக்கு கடிதம் ஒன்று இனம் தெரியாதேரால் நேற்று வியாழக்கிழமை (24) அனுப்பபட்டுள்ளதையடுத்து சம்பவதினமான இரவு உடனடியாக பொலிசார் நீதிமன்ற பதிவாளர் நீதவான் தொலைபேசிக்கு உடன் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல் வழங்கியதுடன், கட்டிடத் தொகுதியை சுற்றி பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் அந்த பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் பொலிஸ் மேப்பநாய் சகிதம் கட்டிடப்பகுதியை சுற்றி வெடிகுண்டை தேடி பாரிய தேடுதல் நடவடிக்கையினை 8 மணிவரை மேற்கொண்டதை தொடர்ந்து நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

முதலாவது செய்தி👇👇👇

மட்டக்களப்பு நீதிமன்றை வெடி குண்டுவைத்து தகர்க்கப் போவதாக தொலைபேசி அழைப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்க்கப் போவதாக நேற்று வியாழக்கிழமை (24) இரவு வந்த தொலை பேசியையடுத்து அந்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்க்கப் போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று சம்பவதினமான இரவு வந்ததையடுத்து உடனடியாக பொலிசாருக்கு அறித்துள்ளார்.

இதனையடுத்து நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டித்தை சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன், புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து இந்த பகுதியையில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பில் சீயோன் தேவலாய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட ஸஹ்ரான் காசிமின் ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படும் பலரது மற்றும் பிரதான சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!
செய்திகள்

ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!

September 16, 2026
Next Post
இலங்கையில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது; சுற்றுலாப்பயணிகள் விளக்கம்!

இலங்கையில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது; சுற்றுலாப்பயணிகள் விளக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.