Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

மட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டு வைத்து தகர்த்தப் போவதாக பொலிசாருக்கு கிடைத்த கடிதம் தொடர்பான சம்பவத்தை அடுத்து இன்று (28) மீண்டும் விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொண்ட பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த நீதின்ற கட்டிடத் தொகுதியை 25 ம் திகதிக்கும் 28 ம் திகதிக்கும் உட்பட்ட நாட்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக கடந்த வியாழக்கிழமை பொலிசாருக்கு கிடைத்த பதிவு தபால் ஒன்றையடுத்து பொலிசார் உடனடியாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு தொடக்கம் நீதிமன்ற கட்டிட தொகுதி பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை 5 மணி தொடக்கம் விசேட அதிரடிப்படையினர் 8 மணி வரை மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் நடாத்திய பின்னர் நீதிமன்றத்துக்குள் செல்வோரை பலத்த சோதனையின் பின்னர் உள் நுழைய அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (28) விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற உத்தியோகத்தர்களின் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் உள் நுழைய தடை விதித்ததுடன் அனைவரையும் பலத்த சோதனையின் பின்னர் உள் நுழைய அனுமதித்தனர்.

கட்டிட தொகுதியை சுற்றி பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் புலனாய்வு பிரிவினரும் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதேவேளை வெடிகுண்டு வெடிக்கப் போவதாக வந்த கடிதம் தொடர்பாக பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் தனித் தனியாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
நாட்டின் புலனாய்வு துறையை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும்; முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை

நாட்டின் புலனாய்வு துறையை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும்; முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு