Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டின் புலனாய்வு துறையை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும்; முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை

நாட்டின் புலனாய்வு துறையை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும்; முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வீதி தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் நீக்கி, பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த வீதிகளை திறந்து விட்டுள்ளதன் மூலம் நாடு பாதுகாப்பான நிலையில் இருப்பதாக அரசாங்கம் நினைக்கக்கூடாது. பாதுகாப்பு அரண்களை அகற்றுவதாக இருந்தால் நாட்டின் புலனாய்வு துறையை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும்.

அத்துடன் இந்த நாடு சுவிசர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரத்துக்கு வந்ததுடன் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பல வருட காலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்கள் அகற்றப்பட்டன.

இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதியாகி இருப்பதாக அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமாக நினைத்துவிடக்கூடாது. தேசிய பாதுகாப்பு என்பது மிகவும் விஸ்தீரமானதாகும்.

அதனால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த வீதிகளை மீண்டும் திறப்பதாக இருந்தால் எமது புலனாய்வு துறையை பலப்படுத்த வேண்டும். அவர்களின் மன நிலையை உயர்ந்த மட்டத்தில் வைக்க வேண்டும்.

ஆனால் எமக்கு கிடைத்த தகவலுக்கமைய எமது புலனாய்வு துறையினரின் மன நிலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

புலனாய்வு பிரிவின் பிரதானி ஜெனரல் சுரேஸ் சலேயை அந்த பதவியில் இருந்து உடனடியாக நீக்கி இருப்பது குறித்து நாங்கள் ஆச்சரியமடைகிறோம்.

முக்கியமான பதவியில் இருக்கும் ஒருவரை அவ்வாறு திடீரென நீக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அவருடன் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும், அவருக்கு அடுத்தபடியாக அந்த பதவிக்கு வர இருப்பவருக்கு.

அவரின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள சிறிதுகாலம் அந்த பதவியில் அவரை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டிருந்தால், அறுகம்பே சம்பந்தமான நிலை ஏற்பட்டிருக்காது.

தனிப்பட்ட விடயங்களுக்காக நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்காெள்கிறோம். அத்துடன் எமது நாடு சுவிட்சர்லாந்து அல்ல.

அதனால் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என பாதுகாப்பு பிரிவினர் பிரதமருக்கு தெரிவித்ததாக பிரதமர் தெரிவித்திருந்தார். இந்த நாடு சுவிட்சர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஏனெனில் அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பிரபுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு தொடர்பாகவும் அந்த பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், பாதுகாப்புக்காக செல்லும் வாகனம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்கள்.

ஆனால் அந்த பதவிக்கு வந்த பின்னர் அந்த பாதுகாப்பு வழங்கப்படுவது நபருக்கு அல்ல, அந்த பதவிக்கு என்பதை தற்போது பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எங்களுக்கு எப்படிவேண்டுமானாலும் கதைக்கலாம். ஆனால் ஆட்சி செய்யும்போது, பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை மக்கள் விடுதலை முன்னணி தற்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்

Tags: Srilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு
செய்திகள்

தெஹிவளையில் நேற்று இரவு பரபரப்பு

August 5, 2026
விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு
செய்திகள்

விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு

August 5, 2026
கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்க வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன; மக்களுக்கு எச்சரிக்கை

August 5, 2026
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
Next Post
தாயை தனிமையில் விட்டு விட்டு வெளிநாடு சென்ற பிள்ளைகள்; வயோதிப பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

தாயை தனிமையில் விட்டு விட்டு வெளிநாடு சென்ற பிள்ளைகள்; வயோதிப பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.