இன்று (30) நடைபெறவுள்ள அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ரயில் பொது முகாமையாளருடன் நேற்று (29) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் நிலைய அதிபர் பதவி தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், ரயில் நிலைய அதிபர்களின் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் இருந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் சாதகமான பதில் கிடைக்காததால் இந்த தீர்மானத்திற்கு வந்ததாக சோமரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.