Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒவ்வொரு தனி மனிதனும் தான் சுயமாகவும்,கௌரவமாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் நோக்கம்; கிருஷ்ணகோபால் திலகநாதன்

ஒவ்வொரு தனி மனிதனும் தான் சுயமாகவும்,கௌரவமாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் நோக்கம்; கிருஷ்ணகோபால் திலகநாதன்

2 years ago
in செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் வேட்ப்பாளர் கிருஷ்ணகோபால் திலகநாதனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கையானது நேற்றுமாலை(31) செங்கலடி பிரதேசத்தில் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வளமான நாடு அழகான வாழ்க்கைக்காக திசை காட்டியை வெல்லச் செய்வோம் என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங்கள் செங்கலடி வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கிருஷ்ணகோபால் திலகநாதன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்ததாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறுபட்ட மக்கள் சார்ந்த பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றில் மதவனை மயிலத்தமடு மேச்சல் தரை பிரச்சினை தொடர்பாக அறிக்கைகளை நாளை (01.11.2024) மட்டக்களப்பிற்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சுனில் கெந்தனட்டி வருகை தரவுள்ளார். அவரிடம் இவ் அறிக்கையினை சமர்பிக்கவுள்ளோம்.

இது போன்று மாவட்டத்தில் காணி தொடர்பான பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. அது மட்டுமல்லாது மக்களின் அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்சினைகள் என்பன தொடர்பாக எங்களால் அமைக்கப்பட்ட வட்டார சபைகளின் ஊடாக ஆய்வினை மேற்கொண்டிருக்கிறோம். இது தொடர்பான விடயங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளோம். அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களில் தேசிய மக்கள் சக்தி மிகவும் ஆர்வமாகவுள்ளது. ஈஸ்ரர் குண்டு தாக்குதல் தொடர்பான விடயங்கள் எல்லாம் தற்போது கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக அவர் ஊடகங்களுக்கு இதன்போது தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
பொதுத்தேர்தல் தொடர்பில் அதிகரித்துவரும் முறைப்பாடுகள்; தேர்தல் ஆணைக்குழு

பொதுத்தேர்தல் தொடர்பில் அதிகரித்துவரும் முறைப்பாடுகள்; தேர்தல் ஆணைக்குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு