Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மயிரிழையில் உயிர் தப்பிய மனோ கணேசன்; பொலிஸார் விசாரணை

மயிரிழையில் உயிர் தப்பிய மனோ கணேசன்; பொலிஸார் விசாரணை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நேற்றிரவு வடகொழும்பு, கதிரானவத்தை பிரதேசத்திலே, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், மனோ கணேசனும் அவர் சக கொழும்பு மாவட்ட வேட்பாளர், ARV லோஷனும், ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, அவர்களது பிரசாரக் குழுவை நோக்கி திடீரென ஒரு பாரந்தூக்கி இயந்திரம் பின்பக்கமாக வந்து மோதியுள்ளது.

இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இருபுறமும் வீடுகள் அமைந்த ஓர் ஒடுங்கிய அந்த ஒழுங்கையில் இருந்த குறுகிய பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, முன்புறமாக இருந்து பின்னோக்கி (reverse) வந்த வாகனம் மோதியதில், மனோ கணேசனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அவரது சாரதியும் தற்போதைய தனிப்பட்ட பாதுகாவலருமான ரத்நாயக்க கீழே விழுந்துள்ளனர்.

அந்தப் பாரந்தூக்கியின் பாரிய சக்கரங்கள், பாதங்களின் மேல் ஏறி நசுக்கியதன் காரணமாக உடனே அவர்கள் கொழும்பு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த மட்டக்குளிய பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி கருணாரத்ன உட்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்தப் பாரந்தூக்கியை அப்போது
செலுத்திய ஓட்டுநரையும், அவர் பணிபுரியும் நிறுவனத்தின் (Galaxy Steels) உரிமையாளரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு விபத்தா? அல்லது மனோ கணேசன் குறிவைக்கப்பட்டாரா ? அல்லது அவரது சக வேட்பாளர் லோஷன், அல்லது ஆதரவாளர்களை அச்சுறுத்த நடந்த ஒரு திட்டமிடப்பட்ட செயலா என்பது குறித்து சகல கோணங்களிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக பிரசார நடவடிக்கைகளை நிறுத்திய மனோ கணேசன், சக வேட்பாளர் லோஷனையும் அழைத்துக்கொண்டு கொழும்பு அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று அங்கே சிகிச்சை பெற்றுவரும் தனது சாரதியும் தனிப்பட்ட பாதுகாவலருமான ரத்நாயக்கவைப் பார்வையிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
அறுகம் குடா தாக்குதல் விசாரணைகளில் திடீர் திருப்பம்

அறுகம் குடா தாக்குதல் விசாரணைகளில் திடீர் திருப்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு