Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பனை அபிவிருத்திச் சபையின் நியமனங்களால் தேர்தல் சட்டமீறல்

பனை அபிவிருத்திச் சபையின் நியமனங்களால் தேர்தல் சட்டமீறல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், அக்டோபர் 29 அன்று, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளது.

பனை அபிவிருத்திச் சபையின் (PDB) தலைவர் பதவிக்கு செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை அக்டோபர் 10ஆம் திகதி அன்று நியமிக்கப்பட்டதோடு, அதைத் தொடர்ந்து 12 நாட்கள் இடைவெளியில் அவர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக விநாயகமூர்த்தி சகாதேவன், அக்டோபர் 22 அன்று அதே பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு விதித்துள்ள தடைகளுக்கு மத்தியிலும் தலைவர்கள் மாற்றம் மற்றும் பல புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கு பொறுப்பான அமைச்சர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவால் (ECSL) செப்டெம்பர் 25 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியில் மற்றும் தேர்தல் சட்டத்தில், குறிப்பாக அரச அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன் அனுமதி பெறாமல், தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்களில் எந்தவொரு ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் அல்லது இடமாற்றங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முக்கியமான தேர்தல் காலகட்டத்தில் சட்டத்தை மதிக்காத வகையில் அரசாங்கம் நடந்துகொள்வது கேள்விக்குரிய சூழ்நிலையை எழுப்புகிறது.

இவ்வாறான நியமனங்கள், பொதுமக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்துவதுடன், தேர்தல் நடைமுறையின் நேர்மைக்கும், ஜனநாயக செயல்முறையின் நியாயத்தன்மையும் கேள்விக்குட்படுத்தப்படலாம். இது குறித்து இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என TISL கோருகிறது.

பொது நிறுவனங்கள் மீதான அரசியல் பக்கச்சார்பு அல்லது தேவையற்ற செல்வாக்கின் சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக பொதுத் தேர்தல் முடியும் வரை பொது நிறுவனங்களில் இத்தகைய நியமனங்களை இடைநிறுத்துமாறு TISL மேலும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
Next Post
கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் மீட்பு

கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு