Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் இந்த நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவார்; முன்னாள் பிரதேசசபை தவிசாளர் சி. தயாந்தராஜா

எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் இந்த நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவார்; முன்னாள் பிரதேசசபை தவிசாளர் சி. தயாந்தராஜா

2 years ago
in செய்திகள்

எதிர்வரும் 14 ஆம் தேதி பின்னர் இந்த நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாசர் தெரிவு செய்யப்படுவார். அதன் பின்னர்; கைவிடப்பட்ட வீடு அமைப்பு திட்டங்களை எனது தலைமையிலே முடித்துத்தருவேன் அதேவேளை நாங்கள் களவாடுவதற்கு அரசியலுக்கு வரவில்லை. இந்த மக்களினுடைய அவலங்களைக் கண்டு சேவை செய்வற்காக அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டோம். என ஜக்கிய மக்கள் சக்தி ரெலிபோன் சின்னத்தில் 3 இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதேசசபை தவிசாளர் சி. தயாந்தராஜா தெரிவித்தார்.

சந்திவெளி பாலையடிதோணா பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (4) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட ரெலிபோன் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதேசசபை தவிசாளர் தயாந்தராஜா இவ்வாறு தெரிவித்தார்

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொகுதியின்; பிரதான அமைப்பாளராக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருப்பதுடன் எமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நேரடித் தொடர்பான பயணத்தில் நான் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.

கடந்த கால வரலாற்றை நாங்கள் முற்றாக ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும். என்பதற்காக இம்முறை இந்த தேர்தலில் பயணிக்கின்றேன். எனவே இந்த தேர்தல் ஒரு மிகவும் தீவிரமான தேர்தல் அதாவது மாவட்டத்திலே 49 கட்சிகளை சேர்ந்த 392 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிலும் யார் வெல்லப் போகின்றார் என்பது கார்த்திகை 14ஆம் திகதி எங்களுக்கு தெரியும்

இந்த மாவட்டத்திலே கப்பம், கொள்ளை, கொலை செய்தவர்கள் நாங்கள் முஸ்லிம்களுக்கு வாக்கெடுத்து கொடுக்கப் போகின்றோம். என பொய்பிரச்சாரம் செய்து எங்கள் மீது சேறு பூசுகின்றார்கள். நான் கடந்த 20 வருட காலமாக இந்த மாவட்டத்தில் வாகரை தொடக்கம் துறைநீலாவணை வரை அதே போன்று புல்லுமலை பகுதி உட்பட மாவட்டம் பூராகவும் ஒரு சமூக சேவை நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளராக மக்களுக்கு மிகவும் திறம்பட செயற்பட்டு சேவையாற்றி வருகின்றேன்.

அந்த வகையிலே நான் இந்த முஸ்லிம்களுக்கு வாக்கெடுத்து கொடுப்பதற்கு எந்த வகையிலும் நான் எத்தணிக்க போவதில்லை. அவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப் போவதில்லை.

கடந்த காலங்களிலே வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டவர்கள் இன்று தமிழரசு கட்சியிலே கூச்சமிடுகின்றார்கள். அன்று வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வாக்குகளை தாரை வார்த்து கொடுத்தவர்கள் அவர்கள் தான் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.

நான் இந்த கிராமத்துக்கு புதியவராக இருந்தாலும் இந்த மாவட்டத்திலே பாரியளவிலான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றேன். எங்களுடைய கட்சி தலைவர் கடந்த காலங்களில் வீடமைப்பு திட்டங்களை மேற்கொண்டிருந்த வேளையிலே நாங்கள் அவர்களோடு தோளோடு தோல் நின்று செய்யப்பட்டவர்கள்.

இருந்தாலும் எங்களுடைய தொகுதி கூட்டத்திலே உறுதியாக கூறப்பட்டது இந்த வீடு அமைப்பு திட்டம் எங்களுடைய கடந்த கால அரசாங்கத்திலே புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் எதிர்க்கட்சி என்ற காரணத்தினால் தான்.

எனவே அந்த அடிப்படையிலே வருகின்ற 14 ஆம் திகதிக்கு பிறகு இந்த நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவார். அதன் பிற்பாடு இந்த வீடு அமைப்பு திட்டங்கள் முடிக்கப்படாமல் இருந்தால் நிச்சயமாக என்னுடைய தலைமையிலே நான் முடித்து தருவேன். அதேபோன்று புதிய வீட்டு திட்டங்கள் மலசலகூடம் இல்லாதவர்களுக்கு மலசலக்கூடம், கிணறுகள் இல்லாதவர்களுக்கு கிணறுகள் கட்டிக் கொடுப்பேன்.

அதேவேளை சூறையாடப்பட்டிருக்கின்றன காணிகளை மீட்டு அது எங்களுடைய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். அது மாத்திரம் அல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த காணி பகிர்ந்தளிப்பதற்கு நாங்கள் முன் நின்று இந்த மக்களுடைய சேவைகளை நிச்சயமாக திறம்பட செய்து வைப்பேன் என்பதை கூறிக் கொள்கின்றேன்.

மாவட்டத்தில் கல்குடா தொகுதி, பட்டிருப்பு தொகுதி, மற்றும் மட்டக்களப்பு தொகுதிகளான 3 தொகுதிகளிலும் என்னுடைய இளைஞர் அணிகள் பாரிய அளவிலே என்னுடன் கைகோர்த்து நிற்கின்றார்கள் அதனைத் தான் என்னுடைய வெற்றியாக கருதுகின்றேன். எனவே ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திற்கும் மூன்றாம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற எனக்கும் வாக்களித்து வெற்றி பெறசெய்ய வேண்டும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
ஜனாதிபதி உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் நாணயத்தாள்

ஜனாதிபதி உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் நாணயத்தாள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.