கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வை வழங்காத சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக இன்று (05) காலை 8 மணி முதல் காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலை வைத்தியர்கள் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பிரச்சினை தொடர்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை அதிகாரிகள் வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் அசங்க கோனார தெரிவித்தார்.