Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கௌதம் கம்பீரின் மீது குற்றச்சாட்டு

கௌதம் கம்பீரின் மீது குற்றச்சாட்டு

2 years ago
in செய்திகள், விளையாட்டு

இந்திய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் செயல் காரணமாகவே, இந்திய அணி, சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணியிடம் வெள்ளையடிப்பு தோல்வியை தழுவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையும் இந்த விடயத்தில் கம்பீரின் மீது அதிருப்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு இதற்கு முன்னர் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளத்தை தயார் செய்வதில் தனி கவனம் செலுத்தி வந்தார். எப்போதும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். அவ்வாறான ஆடுகளங்களை எதிரணிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன என்பதை உணர்ந்ததன் காரணமாகவே அந்த நடைமுறையை அவர் கடைபிடித்து வந்தார்.

கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் தொடரான பங்களாதேஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இதே நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூருவிலும் அதுபோன்ற ஆடுகளமே தயாரிக்கப்பட்டிருந்தது.

எனினும் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பினனர், பூனே மற்றும் மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டிகளுக்கு முதல் நாளிலிருந்து சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும் என கம்பீர் மற்றும் அவரின் துணை பயிற்சியாளர்கள் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த முடிவுக்கு இந்திய அணி நிர்வாகத்தில் சிலர் ஒப்புதலையும் வழங்கவில்லை. இருந்தபோதும், அதனை மீறி கௌதம்; கம்பீர் இந்த முடிவை எடுத்தார் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. இந்தநிலையில் இதனை பயன்படுத்தியே நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளர்கள் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தினர் என்றும் கூறப்படுகிறது.

இதை அடுத்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்தமை தொடர்பில்,இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகள் பயிற்சியாளர்கள் குழுவிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
Next Post
நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ரணில்

நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ரணில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு