1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனவன்முறையில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நீதி கோரி, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக இன்று (24) புலம்பெயர் தமிழர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை நினைவுகூர்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தை தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்திருந்தன.

1983 ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு சர்வதேச விசாரணையும் நீதியும் கோருவதுடன், சர்வதேச சமூகத்தின் கவனத்தை இந்த விடயத்தின் மீது ஈர்க்கும் நோக்கிலும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பதாகைகள் மற்றும் கோஷங்களை ஏந்தியவாறு அமைதியான முறையில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.








