இளைஞர்களுக்காக இன்று (09) 12 மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி திட்டம் நடத்தப்படுகிறது.
தொற்றுநோயியல் பிரிவின் சமூக ஆலோசகர் வைத்தியர் அதுல லியனபத்திரன, இந்த முயற்சி முதன்மையாக இளைஞர்களை இலக்காகக் கொண்டது என்று விளக்கினார்.
இந்த தடுப்பூசியானது 20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அருகிலுள்ள MOH அலுவலகத்தில் மருந்தை இன்று பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் முறையான தடுப்பூசிகள் போடப்பட்ட 9 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற ஊக்குவிக்கப்படுவதாகவும் வைத்தியர் லியனபத்திரன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த வருடம் மே மாதம் முதல் 1100 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் இந்த அவசர தடுப்பூசி செலுத்தப்படுகிறது.