Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
1000 கோடி ரூபா நட்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடவுள்ள டக்ளஸ்

1000 கோடி ரூபா நட்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடவுள்ள டக்ளஸ்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் நேற்றையதினம் (10) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் என்னைப்பற்றி முழுக்க முழுக்க உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான விடயங்களை கூறியுள்ளார்.

குறிப்பாக அவரது உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான பரப்புரையானது நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் எனக்கு கிடைக்க இருக்கின்ற வெற்றியை பாதிக்கக்கூடிய வகையில் அவரது பொய்யானதும் மற்றும் உண்மைக்கு மாறானதுமான கூற்றாகும்.

இந்நிலையில் அவரின் இந்த பொய்யான கூற்றுக்களுக் கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக எனது சட்டதரணிகளிடம் பாரப்படுத்தியுள்ளேன்.

இந்த பொய்யான மற்றும் என் நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்த அவரினது பொய்யான கூற்றிற்கு, 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன்.

இதேவேளை விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் தான் கூறியது விடயங்கள் பிழை என்றும் உண்மைக்கு மாறான விடயம் என்றும் பத்திரிகையாளர் மாநாட்டினூடாக அல்லது அறிக்கையின் ஊடாக உடனடியாக அறிவிக்க தவறும் பட்சத்தில், அவருக்கு எதிராக 1000 கோடிரூபா நட்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
Next Post
சிறுவர்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும்!

சிறுவர்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு