அரசு வாகனங்களுக்கான டிஜிட்டல் எரிபொருள் அட்டை அறிமுகம்
அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயல்முறையை அதிக வினைத்திறன்மிக்கதாகவும், அதன் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ...










