Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரில்வின் சில்வாவைக் கைது செய்க; நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டை முன்வைக்கும் சம்பிக்க ரணவக்க!

ரில்வின் சில்வாவைக் கைது செய்க; நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டை முன்வைக்கும் சம்பிக்க ரணவக்க!

4 months ago
in அரசியல், செய்திகள்

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பகிரங்கமாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவை கைது செய்ய வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாட்டில் 2019 முதல் 2026 ஏப்ரல் வரை நிலக்கரி கொள்முதல் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகிய மூவரைக் கொண்ட இந்த ஆணைக்குழுவுக்கு ஆறு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நிலக்கரி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சியம் வழங்க வரும்வரை ஆணைக்குழு காத்திருப்பதாகவும், “சம்பிக்க, அஜித், மரிக்கார், சானக்க வருவதில்லையா?” என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும் தாங்கள் வாக்குமூலம் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் கருத்து தெரிவிக்கையில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு மூன்று மாதங்களில் அறிக்கையை வெளியிடும் எனவும், அதன்போது தமது தரப்பினர் விடுதலை பெறுவார்கள் என்றும், முந்தைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் சிறைக்கு செல்லுவார்கள் என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறான கருத்துகள், ஆணைக்குழுவின் சுயாதீன விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அதன் நீதிபதிகளின் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடும் என சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டினார்.

அதனால், அந்த ஆணைக்குழுவை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட ரில்வின் சில்வாவை அழைத்து விசாரணை செய்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பகுதி குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதுவரை சுமார் 54 வீதம் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 9, 2026
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி

September 9, 2026
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
செய்திகள்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!

September 9, 2026
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
Next Post
எப்பாவலையில் அதிர்ச்சி; பாடசாலைக்குள் புகுந்து சக மாணவர்கள் 5 பேர் மீது கத்திக்குத்து!

எப்பாவலையில் அதிர்ச்சி; பாடசாலைக்குள் புகுந்து சக மாணவர்கள் 5 பேர் மீது கத்திக்குத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு