யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று(13.05.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதவான் A.G.அலெக்ஸ்ராஜா குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், குறித்த இளைஞர் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும், 12 மாதக்காலம் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்டகாலமாக யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி திரு. கா. நசிகேதன் முன்னிலையாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








