Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சத்தியலிங்கத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை

சத்தியலிங்கத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை

6 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்க முற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்க மறுத்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றிருந்தது.

இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால், கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த குற்றப்பத்திரிகையின் பிரதியை இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் சிவமோகன் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் சுமந்திரனுக்கும் அதனை வழங்க முற்ப்பட்ட போது அவர் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டுச்சென்றார்.

குறித்த குற்றப்பத்திரிகையில்.. கட்சி மாநாட்டுக்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் நடத்தாமை, சுகயீனம் எனக்கூறி பொதுக்குழு கூட்டத்திற்குவராமை, யாப்பிற்கு முரணாக தேர்தல் நியமனக்குழுவை நியமித்தமை, கட்சி உருக்குலைய காரணமாக இருந்தமை, முல்லைத்தீவு மாவட்டக்குழுவின் ஆலோசனை இன்றி தேர்தல் நியமனங்களை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவமோகன், தோற்றவர்கள், நாடாளுமன்றதேர்தல் கேட்ககூடாது என்று சொன்னவர் யார். அப்படி ஒரு முடிவு கட்சி எடுக்கவில்லை. கட்சி எடுக்காத முடிவை கட்சியின் பேச்சாளர் என்ற போர்வையில் உட்புகுத்த கூடாது.

முஸ்லிம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்ற அவரது கருத்து தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தியது.

அது கட்சி எடுத்த முடிவா இல்லையே. போரை நீங்கள் ஏற்கவில்லை. நீங்கள் கொழும்பில் இருந்தீர்கள் நாங்கள் இந்த மண்ணில் இருந்தோம். அதை ஏற்பதா இல்லையா என்று நாங்களே தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் சொல்லத்தேவையில்லை. தோற்றவர்கள் கேட்க கூடாது என்று கூறிவிட்டு தேசியபட்டியல் கொடுப்பதற்கு இனி இங்கு போராட்டம் நடக்கும்.

நான் எடுக்கமாட்டேன் என்று சொல்லி அவரும். நீங்கள் எடுங்கள் என்று சொல்லி சிலநேரம் கொடுக்கப்படலாம். அது பிழை. படுதோல்வியடைந்த சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியை உருக்குலைத்த சத்தியலிங்கம் ஆகியோர் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகிகொள்ள வேண்டும்.

தேசியபட்டியல் ஆசனத்தை வன்னிக்கு கொடுக்க வேண்டும் என்றால் அது இரண்டாவது விருப்பு வாக்கை எடுத்தவருகே கொடுக்க வேண்டும் என்றார்.

அதேசமயம் குறித்த கூட்டத்தின் போது மருத்துவர் ப.சத்தியலிங்கத்திற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை தமிழ் ராஜபக்ஸர்கள் என்று வர்ணிக்கும் ஆளும் தரப்பு
செய்திகள்

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை தமிழ் ராஜபக்ஸர்கள் என்று வர்ணிக்கும் ஆளும் தரப்பு

May 25, 2025
ஒபாமவின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடிவிட்டது; டொனால்ட் ட்ரம்ப்
உலக செய்திகள்

ஒபாமவின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடிவிட்டது; டொனால்ட் ட்ரம்ப்

May 25, 2025
தங்க முலாம் துப்பாக்கி விவகாரத்தில் கைதான துமிந்த திசாநாயக்க வைத்தியசாலையில்
செய்திகள்

தங்க முலாம் துப்பாக்கி விவகாரத்தில் கைதான துமிந்த திசாநாயக்க வைத்தியசாலையில்

May 25, 2025
கிளிநொச்சியில் கடவையை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கடவையை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு

May 25, 2025
கிளிநொச்சி நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

கிளிநொச்சி நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

May 25, 2025
தற்போது நிலவும் சில மருந்துகளின் பற்றாக்குறைக்கு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு
செய்திகள்

தற்போது நிலவும் சில மருந்துகளின் பற்றாக்குறைக்கு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு

May 25, 2025
Next Post
தேசியப்பட்டியலில் எம்.பியாகிறார் திலித் ஜயவீர

தேசியப்பட்டியலில் எம்.பியாகிறார் திலித் ஜயவீர

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.