Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மக்களுக்கு அச்சுறுத்தலான தொல்லியல் குழு கலைக்கப்பட வேண்டும்; ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு மக்களுக்கு அச்சுறுத்தலான தொல்லியல் குழு கலைக்கப்பட வேண்டும்; ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் காணப்படும் இடங்களை கண்டறிவதற்கும், அவற்றை பரிபாலிக்கவும் முன்னாள் ஜனாதிபதி கோதாபாயவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண புத்திஜீவிகள் ஜனாதிபதி அனுரவிடம் கோரிக்கை விடுத்துள்ளளனர்.

மேலும் அவர்கள் இதுதொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது?

கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக நிலங்களையும் வாழ்விடங்களையும் தொல்பொருளென வகைப்படுத்தி அவற்றை சுவீகரிக்கும் நோக்கில் இக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் இருந்த பலர் அவர்கள் நியமிக்கப்பட்டபோது இருந்த பதவிகளில் தற்போது இல்லை.

2020 ஜூனில் நிறுவப்பட்ட இந்த செயலணியில் பெரும்பான்மையானோர் பௌத்த தேரர்களாகவும் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான அரச அதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் இடம்பெற்றனர்.

இந்த செயலணியினது செயற்பாடுகள் தொடர்பில், சிறுபான்மையினரிடையே பல்வேறு சந்தேகங்களும் அச்சமும் ஏற்பட்டிருந்தன.

அப்போதைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் மிகக்கடுமையாக இக்குழுபற்றி விமர்சித்து, இது கலைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தபோதும் அன்றைய ஜனாதிபதியும் அரசும் இதுபற்றி எதனையும் கவனத்திலெடுக்கவில்லை.

இக்குழு அமைக்கப்பட்ட பின் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் இருப்புகளுக்கும் அவர்களது பூர்வீக காணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களின் குறிப்பாக கிழக்கு மாகாணத்து மக்களின் இருப்புக்கு ஆபத்தான இக்குழு உடனடியாக கலைக்கப்பட்டு வெற்றும் வெறிதுமாக ஆக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
ரணிலுக்கு தெரியாமல் ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப் பட்டியலில்

ரணிலுக்கு தெரியாமல் ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப் பட்டியலில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு