Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமூக வலைத்தளங்கள் ஊடாக கப்பம் கோரும் மோசடி; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்கள் ஊடாக கப்பம் கோரும் மோசடி; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் கப்பம் கோரும் மோசடி தொடர்பில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) தகவல்களைத் திரட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைகள் இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசடிக்காரர்கள் தங்களது இலக்குகளைத் தெரிவு செய்வதற்கு முன்னர், அவர்களின் சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களை சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் பட்டியலில் இணைத்துக்கொள்வதாக தெரியவந்துள்ளது.

மோசடியின் ஆரம்ப கட்டமாக, Instagram ஊடாக அழகான பெண்ணின் புகைப்படத்தைக் கொண்ட போலியான கணக்கிலிருந்து ‘Hi’ எனக் குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக SLCERT தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலளிக்கும் நபர்களை சில நாட்கள் கண்காணித்த பின்னர், மீண்டும் அவர்களுடன் உரையாடலை ஆரம்பிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, குறித்த பெண்ணின் அரைகுறை ஆடை அல்லது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி, பதிலுக்கு தங்களது புகைப்படங்களை அனுப்புமாறும் அல்லது WhatsApp வீடியோ அழைப்பின் மூலம் நிர்வாணக் காட்சிகளை வழங்குமாறும் பாதிக்கப்பட்டவர்களை மோசடிக்காரர்கள் தூண்டுகின்றனர்.

அவ்வாறு பெறப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து வைத்துக்கொண்டு, அவற்றை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக அச்சுறுத்தி பணம் மற்றும் கப்பம் கோரப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே, அடையாளம் தெரியாத சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் மற்றும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு SLCERT பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அடையாளம் தெரியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு