Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!

51 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு வெள்ளாடுகள் மற்றும் புறாக்களை கடத்திச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தமிழக பொலிஸார் முறியடித்துள்ளனர்.

திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் பதிவு எண் இல்லாத இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகில் சிலர் வெள்ளாடுகள் மற்றும் பெட்டிகளை ஏற்றிக்கொண்டிருந்த நிலையில், பொலிஸார் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது, கடத்தலில் ஈடுபட்டவர்கள் படகை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் படகை சோதனையிட்ட பொலிஸார், அதிலிருந்து 8 வெள்ளாடுகளையும், மூன்று பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த புறாக்களையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வெள்ளாடுகள் மற்றும் புறாக்களின் மொத்த பெறுமதி இலங்கை நாணயப்படி சுமார் 20 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றை படகு மூலம் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தூத்துக்குடியில் இருந்து மஞ்சள், ஏலக்காய், பூச்சிக்கொல்லி மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், வாசனை சோப்புகள் மற்றும் ஷாம்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இலங்கைக்கு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் தமிழக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!

August 8, 2026
நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 8, 2026
சமூக வலைத்தளங்கள் ஊடாக கப்பம் கோரும் மோசடி; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!
செய்திகள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக கப்பம் கோரும் மோசடி; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

August 8, 2026
வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

August 8, 2026
லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

August 8, 2026
Next Post
நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் சீரற்ற வானிலை - 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு