Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்; சபாநாயகர்

அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்; சபாநாயகர்

2 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை நேற்று (24) சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாகனம் மற்றும் இல்லங்களை எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரவில்லை.

எவ்வாறாயினும், தூரப் பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில சமயங்களில் பல நாட்கள் கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய ஏற்படலாம்.

எனவே, தூரத்தின் அடிப்படையில் குறித்த வசதிகளை வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

எனவே, தகுதியானவர்கள் இனங்காணப்பட்டு குறித்த வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகச் சபாநாயகரினால் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா எனச் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர்,

நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் கூறிய ஈழம் தொடர்பான கருத்து சத்தியப்பிரமாணத்துடன் முரண்படுவதாக உள்ளது.

எவ்வாறாயினும், சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னரே தாம் ஈழம் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததாக இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார். அவரது நோக்கம் என்னவென்பது தெரியவில்லை.

எனவே, அவரது சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

August 1, 2026
இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026
நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து
செய்திகள்

நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து

August 1, 2026
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!
செய்திகள்

அம்பாந்தோட்டையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு; பொலிஸார் தீவிர விசாரணை!

August 1, 2026
17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!
செய்திகள்

17 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் அரசியல் கைதிக்கு பிணை; நிபந்தனைகளால் மீண்டும் சிறையில் அடைப்பு!

August 1, 2026
Next Post
ராஜபக்சர்கள் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிடும் பணத்தை கொண்டுவாருங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன் ; நாமல்

ராஜபக்சர்கள் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிடும் பணத்தை கொண்டுவாருங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன் ; நாமல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு