வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது அதிகரிக்கப்பட்டுள்ள வரிச்சுமையைக் குறைக்க வேண்டும், விசேட கொடுப்பனவுகள், பரீட்சை விடைத்தாள் திருத்துவதற்கான கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக பயணக் கொடுப்பனவுகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான முதலாம் ஆண்டு அனுமதி தொடர்பான பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே வவுனியாவிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











