Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட காய்ந்த மிளகாய் அடங்கிய பல கொள்கலன்களுக்குரிய தரச்சான்றிதழ் அனுமதி கிடைக்காமையினால், அவற்றை விடுவிக்க முடியாமல் சுங்கப் பிரிவின் பொறுப்பில் உள்ளதாக சுங்கப் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

காய்ந்த மிளகாய்த் தொகுதிகளை விடுவிப்பதற்கு உணவுப் பரிசோதனை அதிகாரசபை, தாவர தனிமைப்படுத்தல் சேவை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களினதும் அனுமதி அத்தியாவசியம் என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.

அந்த அனுமதிகள் இன்றி சுங்க முறைமை ஊடாகப் பொருட்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது காய்ந்த மிளகாய் அடங்கிய சுமார் 64 கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவற்றுள் 33 கொள்கலன்களுக்கு தரநிர்ணய நிறுவனத்தின் அனுமதி கிடைக்கப்பெறாத அதேவேளை, மேலும் சுமார் 30 கொள்கலன்கள் அனுமதி கிடைக்கும் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டு அழிப்பதற்கு உத்தரவிடப்பட்ட சில கொள்கலன்களும் அவற்றுள் அடங்கும்.

இவ்வாறு தேங்கிக்கிடக்கும் கொள்கலன்களுக்குள் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய, 9 இலட்சம் கிலோவிற்கும் அதிகமான காய்ந்த மிளகாய் காணப்படுவதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்களின் சங்கம் குறிப்பிடுகின்றது.

நிலவும் இந்த நிலைமையின் மத்தியில், எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் காய்ந்த மிளகாய்க்குப் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதே புறக்கோட்டை மொத்தச் சந்தையில் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் விலை 1,600 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 30, 2026
ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!
செய்திகள்

ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!

October 30, 2026
மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் 8 மாதத்தின் பின்னர் உயிரிழப்பு

October 30, 2026
மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!
செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய மூவரின் பதவி உயர்வு இரத்து; மீண்டும் CI பதவிக்கு தரமிறக்கம்!

October 30, 2026
அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!
செய்திகள்

அஸ்வசும கொடுப்பனவுக்கு தகுதி மறுக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடு செய்ய புதிய சந்தர்ப்பம்!

October 30, 2026
பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி
செய்திகள்

பாகிஸ்தானில் நோயாளர் காவு வண்டியில் கோர விபத்து; 10 பேர் பலி

October 30, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு