Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொடரும் சீரற்ற வானிலை; வீடுகளை விட்டு வெளியேறியுள்ள 161 குடும்பங்கள்

தொடரும் சீரற்ற வானிலை; வீடுகளை விட்டு வெளியேறியுள்ள 161 குடும்பங்கள்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சீரற்ற கால நிலை காரணமாக மட்டக்களப்பில் வெள்ள நீரினால் ஒருவர் இழுத்து செல்லப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தினால் 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர், உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதுள்ளனர்.

குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பிரதேசங்களுக்குன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்கள் வெள்ளகாடாக காட்சியளிக்க்கின்றது

இந்த தொடர் மழையினால் மாவட்டதிலுள்ள பல தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன், பல பிரதேசங்களில் வீதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.

இந்த வெள்ளத்தினால் பட்டிப்பளை, காத்தான்குடி, கோரளைப்பற்று கிரான், மண்முனைவடக்கு, ஏறாவூர்பற்று செங்கலடி, பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளைவிட்டு வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதேவேளை வெள்ளத்தினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்து மற்றும் வவுணதீவுக்கும் மட்டக்களப்பு நகருக்கும் இடையிலானதும், கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளிக்கும் மண்டூருக்குமான பிரதான தாம்போதிக்கு மேலால் வீதியை மூடி 4 அடி உயரத்தில் வெள்ள நீரி பாய்து ஓடும் நிலையில் அதனை கடந்து செல்ல முற்பட்ட ஆண் ஒருவரை வெள்ள நீர் இழுத்து சென்று காணாமல் போயுள்ளார்

மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை ஆகக்கூடிய மழைவீழ்சியாக வாகனேரியில் 139.0 மில்லிலீற்றரும் மட்டக்களப்பில் 103.4 மில்லி லீற்றருமாகவும் நேற்று செவ்வாய்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பகல் 11.30 மணிவரை மட்டக்களப்பில் 34 மில்லிலீற்றர் மழை பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது

மாவட்டதிலுள்ள உன்னிச்;சை குளத்தின் 3 வான்கதவு 10 உயரத்திலும் நவகிரிகுளம் றூகம்குளம், வாகனேரிகுளம், கட்டுமுறிவுகுளம், கித்துள்குளம், வெலியாகண்டிகுளம், வடமுனைகுளம், புனானைகுளம், ஆகிய குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாhல் அந்த அந்த குளங்களின் நீர் மட்டத்துக்கு ஏற்றவாறு அளவில் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேவேளை மழையுடனான காற்றினால் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈச்சம்தீவு கன்னங்குடா பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருகில் இருந்த மரம் ஒன்று கட்டித்தின் மீது முறிந்து வீழ்ந்ததால் கட்டிடம் பாதிக்கப்பட்டதுடன், மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையினை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர் அதேவேளை மாவட்டத்தில் வீதிகளில் முறிந்து வீழ்ந்த மரங்களை மாநகரசபையின் தீயணைப்பு படையிளர் வெட்டி அகற்றிவருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்துவருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

உயர்தர மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு சென்று பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் இன்னும் பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் எற்பட்டுள்ளது

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!

July 31, 2026
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்
செய்திகள்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

July 31, 2026
ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது

July 31, 2026
கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!
செய்திகள்

கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!

July 31, 2026
Next Post
தாய் மற்றும் சிசு மரணம்; மன்னார் பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் போராட்டம்

தாய் மற்றும் சிசு மரணம்; மன்னார் பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.