Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

51 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக மட்டக்களப்பு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் மீனவர்களிடம் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரு படகிற்கு 35,000 ரூபா வீதம் 20 படகு உரிமையாளர்களிடமிருந்து சுமார் 7 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமாரும், அந்த அமைப்பின் தலைவரும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தருமான முத்துலிங்கம் ஆகியோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு பாலமீன்மடுவில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

2025ஆம் ஆண்டு சுருக்கு வலை மூலம் சிறிய முரல் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான அனுமதியை புதுப்பிப்பதில் அதிகாரிகள் தாமதம் ஏற்படுத்தியதாகவும், பின்னர் ஒரு படகிற்கு 50,000 ரூபா வரை கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 35,000 ரூபா வீதம் பணம் வழங்கிய 20 படகு உரிமையாளர்கள் அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளதாகவும், இரண்டு படகுகளுக்காக 70,000 ரூபா வழங்கிய ஒருவருக்கு இதுவரை அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, இலஞ்சமாக பெறப்பட்ட பணத்தை மீனவர்களிடம் மீள வழங்குவதுடன், பணம் செலுத்த முடியாத மீனவர்களுக்கும் அனுமதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

September 15, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு