பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீகஹகிவுல 16ஆம் கட்டை சந்திக்கு அருகில் இன்று (15) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், முச்சக்கரவண்டியை செலுத்திய பெண், அதில் பயணித்த சிறுமி உள்ளிட்ட மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் முதலில் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டகெட்டிய பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.








