முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகள், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன மற்றும் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பாலித சிறிவர்தன மற்றும் பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் இந்திக்க சில்வா ஆகியோரும் இந்த மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், குறித்த அதிகாரிகளின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் மற்றும் அரசியல் தலையீடு தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.








