Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 4600ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

மட்டக்களப்பில் 4600ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரையில் 4600க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பல்வேறு போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 25ஆம் திகதி முதல் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர்பாய்ச்சல் குளங்களான உன்னிச்சை, நவகிரி, புலுக்குணாவ, உறுகாமம்,கித்துள், வாகனேரிக்குளம் உட்பட அனைத்து குளங்களினதும் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைக்கான போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்ட நிலையினை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உள்ள வவணதீவு, பட்டிப்பளை, போரதீவுப்பற்று ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கான போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இயந்திரப்படகு சேவைகள் ஊடாக அத்தியாவசிய போக்குவரத்துப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேபோன்று உன்னிச்சைக்குளம் திறந்துவிடப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு –கொழும்பு பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதுடன் நகருக்குள் நுழையும் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு நகரில் பிரதான பஸ் நிலையம், தனியார் பஸ் நிலையம் உட்பட மட்டக்களப்பு வாவியினை அண்டிய பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அதனுடான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி, சந்திவெளி, செங்கலடி உட்பட பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சித்தாண்டியில் பிரதான வீதியுடாக வெள்ள நீர்செல்வதனால் அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டு மாற்றுவழிகள் ஊடாக போக்குவரத்துகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 14 பிரதேச செயலகப்பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் சுமார் 4600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சுமார் 1500 குடும்பங்கள் 30 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது மழையுடனான காலநிலை ஓரளவு குறைந்துவரும் நிலையில் நிவாரணப்பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலக தகவல்கள் தெரிவித்தன.

இதேநேரம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடியோடை பாலம் உள்ள பகுதியில் வெள்ள அனர்த்தம் காரணமாக வீட்டு கூரைகளில் தஞ்சமடைந்திருந்தவர்கள் விமானப்படையின் விமானங்கள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இயந்திரப்படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது
செய்திகள்

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

September 22, 2026
ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!
செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!

September 22, 2026
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!

September 22, 2026
மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!

September 22, 2026
20 ஆவது ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு முதல் வெற்றி!
செய்திகள்

20 ஆவது ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு முதல் வெற்றி!

September 22, 2026
மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

September 22, 2026
Next Post
மேலும் பிற்போகும் உயர்தர பரீட்சைகள்?

மேலும் பிற்போகும் உயர்தர பரீட்சைகள்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.