Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது. 

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலியின் தலைமையில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ள குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உள்வாங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அந்த விசேட தூதுக்குழு சவூதி அரேபிய மன்னரைச் சந்திக்கவுள்ளது. 

இதன்போது சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியிலான பொது மன்னிப்பை வழங்குமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அனுப்பி வைக்கப்படும் கடிதத்தையும் அந்தக் குழு சவூதி அரேபிய மன்னரிடம் கையளிக்கவுள்ளது. 

அதேநேரம் சிவராசா அனோஜன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகச் சட்டரீதியாக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளமையினால், அவரது வழக்கிற்காக இதுவரை ஏற்பட்ட மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் எனக் குறிப்பிட்டார். 

இதனடிப்படையில் அவரது குடும்பத்தினரிடமிருந்து மேன்முறையீட்டிற்காகப் பெறப்பட்டிருந்த பணமும் மீண்டும் கையளிக்கப்படும் என்றும், அவரை விடுவிப்பதற்கான அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது
செய்திகள்

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

September 22, 2026
ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!
செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!

September 22, 2026
மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!

September 22, 2026
20 ஆவது ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு முதல் வெற்றி!
செய்திகள்

20 ஆவது ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு முதல் வெற்றி!

September 22, 2026
மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

September 22, 2026
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 22, 2026
Next Post
ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு