Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிரிவுல்ல பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் சென்ற சொகுசு கார் ஒன்றை பன்னலை நகரத்தில் வைத்து சுற்றி வளைத்து, அதன் சாரதி மற்றும் இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிரிவுல்ல பகுதியில் வைத்து குறித்த சொகுசு காரைப் பரிசோதிப்பதற்காக நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் கட்டளையிட்டபோதிலும், சாரதி காரை அதிவேகமாகச் செலுத்தி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து காரைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார், காரை நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் சிக்னல் செய்த போதிலும் சாரதி பொலிஸாரின் கட்டளையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து காரைச் செலுத்தியுள்ளார். இதனால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதிலும், கார் நிறுத்தப்படாமல் முன்னோக்கிச் சென்றுள்ளது.

தொடர்ந்து, பன்னலை நகரில் வைத்து பொலிஸ் ஜீப் வண்டி மற்றும் மேலும் சில வாகனங்களைக் குறுக்காக நிறுத்தி பொலிஸார் குறித்த காரை வெற்றிகரமாக மறித்துள்ளனர்.

வாகனம் நிறுத்தப்பட்ட போதிலும் சாரதி காரின் கதவுகளைத் திறக்கவில்லை. இதனால் பொலிஸ் அதிகாரிகள் ரி56 துப்பாக்கிகளைக் காண்பித்து கதவைத் திறக்குமாறு உத்தரவிட்ட போதிலும் சாரதி அதனை மறுத்துள்ளார்.

இதன் காரணமாக, பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கியால் காரின் இடதுபுற முன்னங்கண்ணாடியை உடைத்த பின்னரே சாரதி கதவைத் திறந்துள்ளார்.

அதன்படி, காரில் இருந்த சாரதி மற்றும் இரண்டு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சாரதியிடம் இருந்து சிறிய அளவிலான போதைப்பொருளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாழைத்தோட்டம் அல்லது கிரிவுல்ல பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் கிரிவுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!
செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!

September 22, 2026
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!

September 22, 2026
மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!

September 22, 2026
20 ஆவது ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு முதல் வெற்றி!
செய்திகள்

20 ஆவது ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு முதல் வெற்றி!

September 22, 2026
மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

September 22, 2026
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 22, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு