Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீரற்ற காலநிலையால் திருகோணமலை மாவட்டத்தில் 1,708 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் திருகோணமலை மாவட்டத்தில் 1,708 குடும்பங்கள் பாதிப்பு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 1,708 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 182 உறுப்பினர்கள் பாதுகாப்பு மையங்களிலும், 532 குடும்பங்களைச் சேர்ந்த 1621 பேர் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திருகோணமலை மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை பெறப்பட்ட புள்ளிவிபரத் தகவலின்படி சேருவில பிரதேச செயலகப் பிரிவில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 938 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 574 பேரும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 301 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொரவெவ பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேரும், பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 673 பேரும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 403 குடும்பங்களைச் சேர்ந்த 1,084 பேரும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 6 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 34 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் சண்பகவல்லி வித்தியாலயத்திலும், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும், பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 22 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேர் பாரதிபுரம் பாடசாலையிலும், முத்துநகர் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்திலும் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
வாழைச்சேனை பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள்

வாழைச்சேனை பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு