Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மக்களுக்கு சேவை செய்யும் எம்.பிமாருக்கு சம்பளமே உரித்தான ஒன்றல்ல. ஆனால், ஓய்வூதியக்
கொடுப்பனவு நிச்சயம் இரத்துச்செய்யப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் கிழக்குக்கான மக்கள் சந்திப்பு அலுவலக திறப்பு விழா அண்மையில் நடைபெற்றபோது, நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோ அல்லது கலாநிதி பிரதமர் ஹரிணி அமரசூரியவோ எந்த ஒரு அரசாங்க இல்லத்தையும் உபயோகப்படுத்தவில்லை.

முன்னாள் அமைச்சர்கள் தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளித்துள்ளனர். எனினும், எமது அமைச்சர்கள் எவரும் இதுவரை வீடுகளைக் கோரவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில், கொழும்பில் தங்குவதற்காக, மாதிவெலயிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் வீடு வழங்கப்படும்.

அமைச்சர் என்ற வகையில் எனக்கும் மூன்று V8 வாகனங்கள் கிடைக்கும். எனினும் எந்தவொரு வாகனத்தையும் நான் உபயோகிப்பதில்லை.

சம்பளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரித்தானதல்ல. எவ்வாறெனினும் ஓய்வூதியக் கொடுப்பனவை கண்டிப்பாக இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு